சிவா நடித்துள்ள 'சலூன்' படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியானது

நடிகர் சிவா நடித்துள்ள 'சலூன்' படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.;

Update: 2022-12-10 11:35 GMT

சென்னை,

'கன்னிராசி', 'தர்மபிரபு' உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குனர் முத்து குமரன் இயக்கத்தில் நடிகர் சிவா நடித்துள்ள திரைப்படம் 'சலூன் - எல்லா மயிரும் ஒன்னுதான்'. இந்த படத்தில் யோகிபாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

ரேதன் சினிமாஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைக்கிறார். அழர் ஒளிப்பதிவு செய்கிறார். இந்த நிலையில், இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. இதனை நடிகர் யோகி பாபு தன்னுடைய சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.

சிவா வித்தியாசமான தோற்றத்தில் இருக்கும் இந்த போஸ்டர் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்