வைரலாகும் 'டிரான்ஸ்பார்மர்ஸ் ஒன்' படத்தின் கடைசி டிரெய்லர்
டிரான்ஸ்பார்மர்ஸ் திரைப்படத் தொடரின் 8-வது படமாக 'டிரான்ஸ்பார்மர்ஸ் ஒன்' உருவாகியுள்ளது.;
சென்னை,
அமெரிக்க அனிமேஷன் அறிவியல் புனைக்கதையை அடிப்படையாக கொண்டது 'டிரான்ஸ்பார்மர்ஸ் ஒன்' திரைப்படம். இப்படத்தினை இயக்குனர் ஜோஷ் கூலி இயக்கி உள்ளார். இத்திரைப்படத்தில் ஸ்கார்லெட் ஜோஹன்சன், கீகன்-மைக்கேல் கீ, ஸ்டீவ் புஸ்செமி, லாரன்ஸ் பிஷ்பர்ன் மற்றும் ஜான் ஹாம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் இடம்பெற்றுள்ளனர். இது டிரான்ஸ்பார்மர்ஸ் திரைப்படத் தொடரின் 8-வது படமாகும்.
கடந்த ஏப்ரல் 18-ந் தேதி இப்படத்தின் முதல் டிரெய்லர் வெளியானது. அதனை தொடர்ந்து கடந்த ஜூலை 26-ம் தேதி 2-வது டிரெய்லர் வெளியானநிலையில், தற்போது, இப்படத்தின் கடைசி டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. தற்போது, இந்த டிரெய்லர் வைரலாகி வருகிறது.
லைவ்-ஆக்சன் டிரான்ஸ்பார்மர்ஸ் திரைப்படங்களைப் போல இல்லாமல், ரோபோக்கள் பிறப்பிலிருந்தே போருக்கு எப்படி தயாராகி வருகிறது என்பதை அடிப்படையாக கொண்டு புதிய கதைக்களத்தில் இப்படம் உருவாகியுள்ளது. 2டி, 3டி, 4டி மற்றும் ஐமேக்ஸ் வடிவங்களில் 'டிரான்ஸ்பார்மர்ஸ் ஒன்' திரைப்படம் இந்தியாவில் வருகிற 20-ந் தேதி ஆங்கிலம் மற்றும் இந்தியில் வெளியாக உள்ளது.