நிகழ்ச்சியில் கீழே கிடந்த குப்பையை அகற்றிய பிரபல நடிகர்; இதெல்லாம் ஒரு விளம்பரத்திற்காக... நெட்டிசன்கள் விளாசல்
நிகழ்ச்சி ஒன்றில் கீழே கிடந்த காகித குப்பையை நடிகர் ரன்வீர் சிங் அகற்றிய புகைப்படம் வைரலான நிலையில், இதெல்லாம் ஒரு விளம்பரத்திற்காக என நெட்டிசன்கள் அவரை கலாய்த்து உள்ளனர்.;
ஐதராபாத்,
இந்தி திரையுலகில் காதல் ஜோடிகளாக வலம்வந்து பின்னர், திருமணம் செய்து கொண்டவர்களில் குறிப்பிடத்தக்க ஜோடி நடிகர் ரன்வீர் சிங் மற்றும் நடிகை தீபிகா படுகோனே ஆவர்.
இந்நிலையில், திரை பிரபலங்களுக்கு சிகை அலங்காரம் செய்யும் பணியில் ஈடுபட்டு வரும் தர்ஷன் யேவலேக்கர் என்பவரின் முடி திருத்தும் கடை ஒன்றை நடிகர் ரன்வீர் சிங் திறந்து வைத்து உள்ளார்.
இந்த நிகழ்ச்சியில், உற்சாகமுடன் காணப்பட்ட ரன்வீர் சிங், தரையில் கிடந்த குப்பைகளை அகற்றி உள்ளார். திரை பிரபலங்களை படம் பிடிக்கும் புகைப்பட கலைஞரான ரோகன் ஸ்ரேஸ்தா என்பவருடன் பிராங்க் விளையாட்டிலும் ஈடுபட்டார்.
நிகழ்ச்சியை மகிழ்ச்சியாக கொண்டு செல்லும் நோக்கில் அவர் காணப்பட்டார். எனினும், அவரது இந்த புகைப்படம் சமூக ஊடகங்களில் வெளிவந்து வைரலானது. இதனை ஒரு சிலர், பொது நிகழ்ச்சியில் ஒரு விளம்பரம் தேடுவதற்காக ரன்வீர் இதுபோன்று செயல்படுகிறார் என குறிப்பிட்டனர்.
வேறு சிலர், ரன்வீரின் மனைவி தீபிகா படுகோனே அடிக்கடி தூய்மையை பற்றி பேசி வருவார். அந்த பாதிப்பு அவருக்கும் தொற்றி கொண்டது என கிண்டல் செய்து உள்ளனர்.
இந்த தருணத்தில் படம் பிடிக்க வேண்டும் என்பதற்காக அவர் வந்தது போன்று உள்ளது. அதிர்ஷ்டவசத்தில், அதற்கு சில காகித துண்டுகளும் அவருக்கு உதவி செய்து உள்ளன என ஒருவரும், 50 ரூபாய்க்காக ஓவர் ஆக்டிங் செய்கிறார் என மற்றொருவரும் அவரை கலாய்த்து தள்ளியுள்ளனர்.