ஓடிடியில் வெளியான 'தி பாய்ஸ் சீசன் 4'
தி பாய்ஸின் புதிய தொடர் ஓடிடியில் தமிழில் வெளியாகியுள்ளது.
சென்னை,
பொதுமக்களால் அங்கீகரிக்கப்பட்ட சூப்பர் ஹீரோக்களை தனியார் நிறுவனம் ஒன்று விலைக்கு வாங்கி சந்தைப்படுத்தி சம்பாதிக்கிறது. பெரும்பாலான சூப்பர் ஹீரோக்கள் கருப்பு பக்கங்களை உடையவர்களாக உள்ளனர். மது, மாது, சூது என வாழும் அவர்கள் அந்த நிறுவனத்தை பயன்படுத்தி எளிதாக மறைத்துவிடுகிறார்கள்.
இந்தநிலையில் சூப்பர் ஹீரோக்களால் பாதிக்கப்படும் சாமானியர்கள் ஒன்றுகூடி அவர்களை எதிர்த்து போராடுவது தொடர்பான கதை. சிறந்த இணையதொடருக்கான பல்வேறு விருதுகளை வென்றது. இதன் புதிய தொடர் அமேசான் பிரைம் ஓடிடியில் தமிழில் வெளியாகி உள்ளது.