பிரபல பட அதிபர் மீது நடிகை பாலியல் புகார்

பட வாய்ப்புக்காக தன்னை படுக்கைக்கு அழைத்த கசப்பான அனுபவத்தை அனு இம்மானுவேல் பகிர்ந்துள்ளார்

Update: 2023-08-29 04:29 GMT

தமிழில் விஷாலின் 'துப்பறிவாளன்' படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமான அனு இம்மானுவேல் தொடர்ந்து சிவகார்த்திகேயனுடன் 'நம்ம விட்டு பிள்ளை' படத்தில் நடித்தார். தற்போது கார்த்தியுடன் 'ஜப்பான்' படத்தில் நடித்து முடித்துள்ளார். தெலுங்கு, மலையாள படங்களிலும் நடித்து இருக்கிறார்.

இந்த நிலையில் பட வாய்ப்புக்காக தன்னை படுக்கைக்கு அழைத்த கசப்பான அனுபவத்தை பகிர்ந்துள்ளார். இதுகுறித்து அனு இம்மானுவேல் கூறும்போது, "நான் சினிமாவுக்கு வந்த புதிதில் என்னிடம் சிலர் தவறாக அணுகினார்கள். பட வாய்ப்பு வேண்டுமானால் படுக்கைக்கு வா என்று சில பெரிய மனிதர்கள் என்னை அழைத்தனர். சமீபத்தில் பிரபல தயாரிப்பாளர் ஒருவரும் என்னை படுக்கைக்கு அழைத்தார். நான் இதற்கெல்லாம் பயப்படாமல் எனது குடும்பத்தினரின் துணையோடு எதிர்கொண்டு சமாளித்தேன்.

இதுபோன்ற பிரச்சினைகள் வரும்போது குடும்பத்தினரோடு சேர்ந்து எதிர்கொள்வதுதான் நல்லது. குடும்பத்தினர் நமக்கு உதவியாக இருப்பார்கள். பெண்களை முன்னேற விடாமல் தடுக்கும் மோசமான நபர்கள் சமூகத்தில் இருக்கிறார்கள். அவர்களை பார்த்து பயம் கொள்ளாமல் துணிச்சலாக முன்னேற வேண்டும்'' என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்