பிரம்மாண்டமாக உருவாகும் 'ஜவான்' படத்தின் சண்டைக்காட்சி.. புதிய தகவல்

ஏழு நாட்கள் இந்தச் சண்டைக் காட்சி படமாக்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.;

Update: 2022-09-16 11:02 GMT

இயக்குனர் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் கதாநாயகனாக நடிக்கும் திரைப்படம் ஜவான். இதில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் போன்ற மொழிகளில் வெளியாக உள்ள இப்படத்தை ரெட் சில்லிஸ் என்டர்டெயின்மென்ட் சார்பாக கௌரி கான் தயாரிக்கிறார்.

இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படம் 2023-ஆம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னை அருகே பிரம்மாண்ட செட் அமைத்து நடந்து வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், ஜவான் திரைப்படத்தில் 200 முதல் 250 பெண்கள் வரை பங்குபெறும் சண்டைக்காட்சி உருவாக இருப்பதாகவும் இதற்காக மும்பையில் இருந்து அவர்கள் சென்னை வர இருப்பதாகவும் ஏழு நாட்கள் இந்தச் சண்டைக் காட்சி படமாக்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்