சூப்பர் ஸ்டார் ஆகவேண்டும் என்ற வெறி வளர அதுவும் ஒரு காரணம் - நடிகர் சிரஞ்சீவி
சூப்பர் ஸ்டார் ஆகி காட்டவேண்டும் என்ற வெறி வளர அது கூட ஒரு காரணம் என்று நடிகர் சிரஞ்சீவி கூறினார்.;
சென்னை,
தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி. இவர் தனது வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்துள்ளார். அவர் அளித்துள்ள பேட்டியில், "எங்கள் வீட்டில் யாரும் சிக்கனமாக இருக்க மாட்டார்கள். எல்லா விளக்குகளையும் போட்டுவிட்டு சென்று விடுவார்கள். ஹீட்டர் போடுவார்கள் மறந்து விடுவார்கள்.
நான்தான் அதையெல்லாம் ஆப் செய்வேன். இதை மிடில் கிளாஸ் மென்டாலிட்டி என்று சொன்னாலும் எனக்கு கவலை இல்லை. நான் எத்தனையோ மேடு பள்ளங்களை தாண்டி வந்து இருக்கிறேன்.
இப்போது கூட ஷாம்பூ தீர்ந்து விட்டால் அந்த பாட்டலில் தண்ணீரை ஊற்றி உபயோகிக்கிறேன். அதேபோல சோப் கரைந்து கடைசிக்கு வந்த பிறகு புதிய சோப்பில் கரைந்து போன சிறிய சோப்பை ஒட்டி சிக்கனமாக வீணாக்காமல் உபயோகிப்பேன்.
சினிமாவிற்கு வந்த புதிதில் சூப்பர் ஸ்டார் என்று நினைப்பா என்றெல்லாம் அசிஸ்டன்ட் டைரக்டர்கள் என்னை பார்த்து ஏளனம் செய்து சத்தம் போட்டு இருக்கிறார்கள். சூப்பர் ஸ்டார் ஆகி காட்டவேண்டும் என்ற வெறி வளர அது கூட ஒரு காரணம்'' என்றார்.