என்னை 50-வது படம்வரை தூக்கிவிட்ட ரசிகர்களுக்கு நன்றி - நடிகை அஞ்சலி
என்னை ஒவ்வொரு படியாக 50-வது படம்வரை தூக்கி விட்டது ரசிகர்கள்தான் என்று நடிகை அஞ்சலி கூறினார்.;
சென்னை,
நடிகை அஞ்சலி தமிழில் 2007-ல் வெளியான 'கற்றது தமிழ்' படம் மூலம் அறிமுகமாகி முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார். தெலுங்கு, கன்னடம், மலையாள படங்களிலும் நடித்துள்ளார். தற்போது அஞ்சலியின் 50-வது படமாக தெலுங்கில் 'கீதாஞ்சலி மல்லி வச்சிந்தி' என்ற படம் தயாராகி உள்ளது.
ஐதராபாத்தில் நடந்த பட நிகழ்ச்சியில் அஞ்சலி பங்கேற்று பேசும்போது, ''எனது 50-வது படம் பிரத்யேகமாக இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். அந்த ஆசையை 'கீதாஞ்சலி மல்லி வச்சிந்தி' படம் தீர்த்து வைத்துள்ளது.
தமிழ், தெலுங்கு மொழிகளில் இதுவரை 50 படங்களில் நடித்து இருக்கிறேன் என்று நினைக்கும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. எனக்கு நிறைய பட வாய்ப்புகளை அளித்த தமிழ் சினிமா துறைக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்.
என்னை ஒவ்வொரு படியாக 50-வது படம்வரை தூக்கி விட்டது ரசிகர்கள்தான். எனவே என்னுடைய தமிழ், தெலுங்கு ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். 'கீதாஞ்சலி மல்லி வச்சிந்தி' படம் அனைத்து ரசிகர்களுக்கும் பிடிக்கும்'' என்றார்.