தலைவர் 171- படத்தின் புது போஸ்டர் வெளியீடு

தலைவர் 171 நாளை வெளியாக உள்ளநிலையில் படக்குழுவினர் புது போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

Update: 2024-04-21 14:56 GMT

ரஜினி ஜெயிலர் படத்திற்கு பிறகு வேட்டையன் திரைப்படத்தில் தற்போது நடித்து வருகிறார். இந்த படம் 2024 அக்டோபர் மாதத்தில் வெளியாக இருக்கிறது. அடுத்தபடியாக ரஜினி தலைவர் 171 படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்க இருக்கிறார். அதே சமயம் தலைவர் 171 படம் தொடர்பான அடுத்த அடுத்த அப்டேட்கள் தொடர்ச்சியாக சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அதன்படி தலைவர் 171 படத்தில் நடிகர் சத்யராஜ், ஸ்ருதிஹாசன் உள்ளிட்டோர் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இந்தப் படத்தின் டீசர் வருகிற 22-ந்தேதி(நாளை) வெளியாக உள்ளதாக படக்குழு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினத்தில் இப்படத்தில் நடிக்க உள்ள நடிகர், நடிகைகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையொட்டி படக்குழுவினர் இன்று புது போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் ரஜினிகாந்தின் கை மட்டும் கடிகாரங்களால் செய்த சங்கிலியை பிடித்து இருக்கிறார்.

லோகேஷ் கனகராஜ் அவரது எக்ஸ் பக்கத்தில் நாளை ஆறு மணி முதல் D.I.S.C.O என்ற தலைப்பில் போஸ்டரை வெளியிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்