'லவ் டுடே' படத்தின் தெலுங்கு டிரைலர் வெளியானது..!
பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் வெளியான 'லவ் டுடே' திரைப்படத்தின் தெலுங்கு டிரைலர் வெளியாகி உள்ளது.;
சென்னை,
நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் 2019-ஆம் ஆண்டு வெளியான கோமாளி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். அவர் இயக்கி கதாநாயகனாக நடித்த 'லவ் டுடே' திரைப்படம் சமீபத்தில் வெளியானது. இந்த படத்தில் பிரதீப் ரங்கநாதனுடன் இணைந்து சத்யராஜ், ராதிகா, யோகி பாபு, ரவீனா மற்றும் ஆதித்யா கதிர் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்த இந்த படத்தை ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்தது. இந்த படத்துக்கு தினேஷ் புருஷோத்தமன் ஒளிப்பதிவு செய்திருந்தார். இந்த படம் கடந்த நவம்பர் 4-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடமும் விமர்சகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
சமீபத்தில் இந்த படத்தை தெலுங்கில் வெளியிடவுள்ளதாக இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் அறிவித்திருந்தார். இந்த நிலையில், 'லவ் டுடே' படத்தின் தெலுங்கு டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது. இந்த டிரைலரை நடிகர் விஜய் தேவரகொண்டா தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த டிரைலர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.