சில குடும்பங்கள் பிடியில் தெலுங்கு சினிமா துறை - நடிகை அமலாபால் புகார்

தெலுங்கு சினிமா துறை சில குடும்பங்கள் பிடியில் உள்ளதாக நடிகை அமலாபால் புகார் அளித்துள்ளார்.

Update: 2022-09-13 03:13 GMT

தமிழ், மலையாளத்தில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் அமலாபால் தெலுங்கில் 5 படங்களில் மட்டுமே நடித்துள்ளார். அதன் பிறகு தெலுங்கு சினிமாவை விட்டு விலகினார். தெலுங்கு சினிமாவில் தொடர்ந்து நடிக்காததற்கு காரணம் என்ன என்ற கேள்விக்கு அமலா பால் பதில் அளித்து கூறும்போது, "நான் தெலுங்கில் நடிக்க வந்தபோது தெலுங்கு சினிமா துறை சில குடும்பங்களின் பிடியில் இருப்பது புரிந்தது. அந்த குடும்ப நடிகர்களும், அவர்களின் ரசிகர்களும் தெலுங்கு சினிமா துறையில் ஆதிக்கம் செலுத்தினர். தெலுங்கில் நான் நடித்தபோது படங்கள் வித்தியாசமாக இருந்தன. ஒவ்வொரு படத்திலும் இரண்டு கதாநாயகிகள் இருப்பார்கள். கதாநாயகியை கேவலம் கவர்ச்சிக்கு மட்டுமே பயன்படுத்துவார்கள். சில காதல் காட்சிகள் பாடல் காட்சிகளில் மட்டுமே கதாநாயகி வருவார். மற்ற திரை முழுவதையும் ஹீரோ தான் ஆக்கிரமித்து இருப்பார். முழு கமர்சியல் படங்களைத்தான் அவர்கள் எடுத்து வந்தார்கள். அதனால் தெலுங்கு சினிமாவில் என்னால் நிலைக்க முடியவில்லை. அதே நேரத்தில தமிழ் சினிமாவில் நடிப்பது எனது அதிர்ஷ்டம். மைனா படம் எனக்கு நல்ல பெயர் வாங்கி தந்தது. மைனாவுக்கு பிறகு தொடர்ந்து வாய்ப்புகள் வரிசை கட்டின. பெரிய நடிகர்களுடன் கூட இணைந்து நடிக்கும் வாய்ப்புகள் வந்தன'' என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்