நயன்தாரா நடித்துள்ள 'கனெக்ட்' படத்தின் டீசர் வெளியானது..!

நடிகர் நயன்தாரா நடித்துள்ள 'கனெக்ட்' திரைப்படத்தின் டீசர் வெளியாகி உள்ளது.

Update: 2022-11-18 14:25 GMT

சென்னை,

நடிகை நயன்தாரா இன்று தன்னுடைய 38-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் நயன்தாராவின் கணவர் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நெகிழ்ச்சியுடன் நயன்தாராவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில் நயன்தாராவின் பிறந்தநாளை முன்னிட்டு இயக்குனர் அஸ்வின் சரவணன் இயக்கத்தில் நயன்தாரா நடித்துள்ள 'கனெக்ட்' திரைப்படத்தின் டீசர் வெளியாகும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி தற்போது 'கனெக்ட்' திரைப்படத்தின் டீசர் வெளியாகி உள்ளது.

இந்த படத்தில் நயன்தாராவுடன் இணைந்து நடிகர் சத்யராஜ், அனுபம் கெர், வினய் ராய் மற்றும் ஹனியா நஃபிஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஹாரர் திரில்லர் வகை திரைப்படமாக உருவாகியுள்ள இந்த படத்தை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தங்களுக்குச் சொந்தமான ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் மூலம் தயாரித்துள்ளனர்.

இந்த படத்திற்கு மணிகண்டன் கிருஷ்ணமாச்சாரி ஒளிப்பதிவு செய்துள்ளார். பிரித்வி சந்திரசேகர் இசையமைத்துள்ளார். 'கனெக்ட்' திரைப்படம் வருகிற டிசம்பர் மாதம் 22-ந்தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்