பாரம்பரிய கலையினை மேற்கொள்ளும் கலைஞர்களுக்கு தமிழக அரசு உதவிட முன்வர வேண்டும் - நடிகர் ரஞ்சித்
உடுமலையில் நடைபெற்ற பவளக்கொடி கும்மியாட்டத்தில் நடிகர் ரஞ்சித் பங்கேற்றார்.
திருப்பூர் மாவட்டம் உடுமலையில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி பவளக்கொடி கும்மியாட்டம் அரங்கேற்ற நிகழ்ச்சி உடுமலை குட்டை திடலில் நடைபெற்றது.
இதில் 500க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் குழந்தைகள் பங்கேற்று உற்சாக நடனத்தினை இசைக்கேற்றார் போலும் ,பாடலுக்கு ஏற்றார் போலும் வெளிப்படுத்தினர்.
நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக நடிகர் ரஞ்சித் பங்கேற்றார். தற்போதைய இளைய தலைமுறையினர் சினிமா, ஆடல் பாடல் என கவனம் செலுத்தி வரும் நிலையில் அழிந்து வரக்கூடிய இந்த பாரம்பரிய கலையினை மீட்டெடுக்க மேற்கொள்ளும் அனைவருக்கும் நன்றி என தெரிவித்தார்.மேலும் இந்த மாதிரியான பாரம்பரிய கலையினை மேற்கொள்ளும் கலைஞர்களுக்கு தமிழக அரசு உதவிட முன்வர வேண்டும் என்றார்.