கவர்ச்சியில் எல்லை மீறிய தமன்னா

Update:2023-06-09 06:28 IST

ஓ.டி.டி. தளங்களுக்கு தணிக்கை இல்லாததால் வெப் தொடர்களில் நடிகைகள் கவர்ச்சியாக நடித்து வருகிறார்கள். இந்த பட்டியலில் இப்போது தமன்னாவும் இணைந்துள்ளார்.

திரைப்படங்களில் இதுவரை கவர்ச்சிக்கு எல்லைக்கோடு வைத்தே தமன்னா நடித்து வந்தார். பாகுபலியில் மட்டும் ஒரு பாடல் காட்சியில் கொஞ்சம் கவர்ச்சியாக பார்க்க முடிந்தது. இந்த நிலையில் தமன்னா நடித்துள்ள லஸ்ட் ஸ்டோரீஸ் 2 வெப் தொடரின் டிரெய்லரை தற்போது வெளியிட்டு உள்ளனர். அதில் தமன்னாவின் நெருக்கமான படுக்கை அறை காட்சிகள் இடம்பெற்று உள்ளன.

அரைகுறை ஆடையில் எல்லை மீறி ஆபாசமாக நடித்து இருப்பதை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சியாகி உள்ளனர். அவர் ஆபாசமாக நடித்துள்ள புகைப்படங்கள் வலைத்தளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன. இந்த தொடரில் படுக்கை அறை காட்சியில் நடிக்க தமன்னா சம்பளத்தை உயர்த்தி கேட்டு ரூ.4 கோடி பெற்று இருப்பதாக தகவல் பரவி உள்ளது.

இதே வெப் தொடரில் நடிக்க கஜோல் ரூ.3 கோடியும் மிருணாள் தாக்கூர் ரூ.3 கோடியும் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்