சினிமாவில் திறமைக்கு மதிப்பு இல்லை - நடிகை நிதி அகர்வால்

சினிமாவில் திறமைக்கு மதிப்பு இல்லை என நடிகை நிதி அகர்வால் அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார்.;

Update: 2022-10-20 03:45 GMT

தமிழில் ஈஸ்வரன், பூமி படங்களில் நடித்துள்ள நிதி அகர்வால் தெலுங்கிலும் முன்னணி கதாநாயகர்கள் ஜோடியாக நடித்து இருக்கிறார். நிதி அகர்வால் அளித்துள்ள பேட்டியில், ''சினிமா துறையில் திறமையை பார்த்து வாய்ப்பு கொடுக்கிறார்கள் என்பதை நான் நம்பமாட்டேன். கேவலம் அழகைத்தான் பார்க்கிறார்கள். திறமைக்கு மதிப்பு இல்லை. உடம்பை காட்டினால்தான் வாய்ப்புகள் கொடுப்பார்கள். 20 சதவீதம் பேர் மட்டுமே திறமையை பார்த்து வாய்ப்புகள் கொடுப்பார்கள்.

இன்னொரு விஷயம் என்னவென்றால் என்னை போன்ற கதாநாயகிக்கு பெரிய கதாநாயகர்கள் படங்களில் வாய்ப்பு கிடைத்தது என்றால் சம்பளம்தான் காரணம். நான் சம்பள விஷயத்தில் கெடுபிடி செய்ய மாட்டேன்.அவர்கள் கொடுத்ததை பெற்றுக்கொள்கிறேன். இப்போது வரை நான் செய்த படங்கள் எல்லாவற்றிலும் அப்படித்தான் நடந்தது. எனக்கு முன்னால் கதாநாயகியாக நடிக்க அணுகியவர்கள் அதிக சம்பளம் கேட்டதால் அவர்களை நிராகரித்துவிட்டு எனக்கு வாய்ப்பு கொடுத்ததை தெரிந்துகொண்டேன்" என்றார்.


நிதி அகர்வால், ஒரு படத்துக்கு ரூ.30 லட்சம் முதல் ரூ.50 லட்சத்திற்குள் மட்டுமே சம்பளம் வாங்குவதாக தெரிகிறது.

Tags:    

மேலும் செய்திகள்