தாகூர் சர்வதேச திரைப்பட விழா: 'மாமனிதன்' படத்துக்கு 3 விருதுகள்
. விருதுகளை குவித்து வரும் மாமனிதன் திரைப்படத்திற்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.;
சென்னை,
இயக்குனர் சீனுராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி, காயத்ரி, குரு சோமசுந்தரம் உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியான திரைப்படம் "மாமனிதன்".
இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜா முதல் முறையாக கூட்டணி அமைத்து இசையமைத்திருக்கின்றனர். யுவன்ஷங்கர் ராஜா தனது ஒய்.எஸ்.ஆர் நிறுவனம் மூலம் இப்படத்தை தயாரித்திருக்கிறார்.
இப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. மாமனிதன் திரைப்படத்தை பார்த்த திரைப்பிரபலங்கள் பலர் இயக்குனர் சீனுராமசாமியை பாராட்டியுள்ளனர்.
சமீபத்தில் இப்படம் டோக்கியோவில் நடைபெற்ற திரைப்பட விழாவில் சிறந்த ஆசிய திரைப்படம் எனும் கோல்டன் விருதினை பெற்றிருந்தது.
இந்நிலையில் மாமனிதன் திரைப்படம் 3 விருதுகளை குவித்துள்ளது. தாகூர் இன்டர்நேஷனல் ஃபிலிம் ஃபெஸ்டிவலில் சிறந்த நடிகருக்கான விருதையும், சிறந்த சாதனை விருதையும், விமர்சகர்கள் தேர்வு விருதையும் சேர்த்து மொத்தம் 3 விருதுகளை மாமனிதன் திரைப்படம் குவித்துள்ளதாக இயக்குனர் சீனு ராமசாமி சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். விருதுகளை குவித்து வரும் மாமனிதன் திரைப்படத்திற்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
Love to @YSRfilms @thisisysr
— Dr.Seenu Ramasamy (@seenuramasamy) August 9, 2022
Thanks tohttps://t.co/GJetWW5tdP #Maamanithan had won
3 prestigious awards in Tagore International film festival Kolkata@ahatamil @ahavideoIN @ilaiyaraaja@VijaySethuOffl @studio9_suresh@SGayathrie @shajichen @ramjisoma7 @onlynikil @Riyaz_Ctc pic.twitter.com/rHpRacQRS6