சூப்பர் ஹீரோ கதையில் சூர்யா

நடிகர் சூர்யாவின் இரும்புக்கை மாயாவி படம் அறிவிக்கப்பட்டதோடு நிறுத்தப்பட்டது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக இருந்த இந்தப் படம் மீண்டும் தொடங்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.;

Update: 2022-06-14 09:30 GMT

ஹாலிவுட்டில் சூப்பர் ஹீரோ படங்கள் அதிகம் வெளியாகி உலகம் முழுவதும் வசூல் குவித்துள்ளன. இந்த படங்களுக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இந்தியில் ஹிருத்திக் ரோஷன் சூப்பர் ஹீரோவாக நடித்துள்ளார். மலையாளத்தில் டோவினோ தாமஸ், குருசோமசுந்தரம் ஆகியோர் நடிப்பில் வெளியான மின்னல் முரளி சூப்பர் ஹீரோ படத்துக்கு பெரிய வரவேற்பு கிடைத்தது. தமிழில் ஏற்கனவே இரும்புக்கை மாயாவி என்ற சூப்பர் ஹீரோ கதையில் சூர்யா நடிக்க உள்ளதாகவும், அதை லோகேஷ் கனகராஜ் இயக்க இருப்பதாகவும் கூறப்பட்டது. ஆனால் படவேலைகள் தொடங்காமல் முடங்கி போனது. இந்த நிலையில் சூர்யா விக்ரம் படத்தில் நடித்த வித்தியாசமான வில்லன் கதாபாத்திரம் ரசிகர்களை கவர்ந்துள்ளதையடுத்து சூப்பர் ஹீரோ கதை படப்பிடிப்பை விரைவில் தொடங்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்