மம்முட்டியை சந்தித்த சூர்யா - இணையத்தில் வைரலாகும் புகைப்படம்

மம்முட்டி தனது சமூக வலைதளப் பக்கத்தில் புகைப்படம் ஒன்று பகிர்ந்து தெரிவித்துள்ளார்;

Update: 2022-11-09 14:55 GMT

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையான ஜோதிகா, திருமணத்துக்கு பிறகு சில வருடங்கள் சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்தார். பின்னர் 36 வயதினிலே படம் மூலம் மீண்டும் நடிக்க தொடங்கினார். இதை தொடர்ந்து மகளிர் மட்டும், நாச்சியார், காற்றின் மொழி, ராட்சசி, ஜாக்பாட், பொன்மகள் வந்தாள், உடன் பிறப்பு உள்ளிட்ட கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்வு செய்து நடித்தார்.

தற்போது இவர் நடிகர் மம்முட்டியுடன் 'காதல் - தி கோர்' திரைப்படத்தில் நடித்து வருகிறார். மம்முட்டி கம்பெனி தயாரிக்கும் இப்படத்தை மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான 'தி கிரேட் இந்தியன் கிட்சன்' படத்தை இயக்கிய ஜியோ பேபி இயக்குகிறார். சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பில் நடிகை ஜோதிகா கலந்து கொண்டார்.

இந்நிலையில், 'காதல் - தி கோர்' திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்திற்கு நடிகர் சூர்யா சென்றுள்ளார். இதனை மம்முட்டி தனது சமூக வலைதளப் பக்கத்தில் புகைப்படம் ஒன்று பகிர்ந்து தெரிவித்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்