கல்லூரியில் நடனம் ஆட சன்னி லியோனுக்கு தடை

கேரளாவில் சன்னி லியோன் நடனத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.;

Update: 2024-06-13 22:45 GMT

திருவனந்தபுரம்,

ஆபாச படங்களில் நடித்து பிரபலமான சன்னி லியோன் தமிழில் வடகறி, ஓ மை கோஸ்ட், தீ இவன் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னட படங்களிலும் நடித்து இருக்கிறார். நடன நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார்.

ஆபாச பட நடிகையான சன்னி லியோனை நடிக்க வைக்கக்கூடாது என்று சில கவர்ச்சி நடிகைகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். முன்னணி இந்தி நடிகர்கள் சன்னி லியோனுடன் நடிக்க மறுக்கின்றனர்.

ஏற்கனவே பெங்களூருவில் நடந்த புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சியில் சன்னி லியோன் நடனம் ஆட தடை விதிக்கப்பட்டது. தற்போது கேரளாவிலும் சன்னி லியோன் நடனத்துக்கு தடை விதித்துள்ளனர்.

கேரளாவில் உள்ள பல்கலைகழக என்ஜினீயரிங் கல்லூரி வளாகத்தில் அடுத்த மாதம் (ஜூலை) 5-ந்தேதி சன்னி லியோன் நடன நிகழ்ச்சியை நடத்த ஏற்பாடு செய்து இருந்தனர்.

இந்த நிலையில் சன்னி லியோன் நடன நிகழ்ச்சிக்கு அனுமதி மறுத்து கேரள பல்கலைக்கழக துணை வேந்தர் உத்தரவிட்டுள்ளார். இது பரபரப்பாகி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்