தற்கொலை செய்துகொண்ட நடிகை துனிஷாவின் காதலனுக்கு பல பெண்களுடன் தொடர்பு
துனிஷா சர்மாவை காதலித்துக்கொண்டே பல பெண்களுடன் ஷீஷன் கான் தொடர்பு வைத்து இருந்ததாகவும், தன்னை அவர் ஏமாற்றியது தெரிந்து துனிஷா சர்மா தற்கொலை செய்து கொண்டார் என்றும் அவரது மாமா தெரிவித்து உள்ளார்.;
இந்தியில் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலமான 21 வயது துனிஷா சர்மா மும்பையில் படப்பிடிப்பு தளத்தில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியது. துனிஷா சர்மாவின் தாய் போலீசில் அளித்த புகாரில், "தனது மகள் தற்கொலைக்கு காதலன் ஷீஷன் கான் காரணம் என்றும், இவர்களுக்குள் 15 நாட்களுக்கு முன்பு காதல் முறிவு ஏறபட்டதாகவும்" தெரிவித்து இருந்தார். இதையடுத்து துனிஷாவின் காதலன் ஷீஷன் கானை போலீசார் கைது செய்தனர். அவர் மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. துனிஷா சர்மாவை காதலித்துக்கொண்டே பல பெண்களுடன் ஷீஷன் கான் தொடர்பு வைத்து இருந்ததாகவும், தன்னை அவர் ஏமாற்றியது தெரிந்து துனிஷா சர்மா தற்கொலை செய்து கொண்டார் என்றும் அவரது மாமா தெரிவித்து உள்ளார். இந்த நிலையில் துனிஷா சர்மா மரணம் குறித்து சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்த வேண்டும் என்று இந்தி திரைப்பட தொழிலாளர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.