சைக்கோ திகில் கதையில் ஸ்ரீகாந்த்
சைக்கோ திகில் கதையம்சத்தில் உருவாகி உள்ள ‘தீங்கிரை' என்ற படத்தில் ஸ்ரீகாந்த் நடிக்கிறார்.
'தீங்கிரை' என்ற பெயரில் புதிய படம் தயாராகி உள்ளது. சைக்கோ திகில் கதையம்சத்தில் உருவாகி உள்ள இந்தப் படத்தில் ஸ்ரீகாந்த் நடிக்கிறார். அவருடன் இணைந்து வெற்றியும் நடிக்கிறார். நாயகிகளாக அபூர்வா ராவ், ஸ்மிருதி வெங்கட் ஆகியோர் வருகிறார்கள். நிழல்கள் ரவியும் உள்ளார். இந்தப் படத்தை பிரகாஷ் ராகவதாஸ் டைரக்டு செய்து முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தும் இருக்கிறார். பிரியா வி.தர்ஷினியுடன் இணைந்து ஏ.கிருஷ்ணகுமார், டி.பிரசாத் ஆகியோர் தயாரித்துள்ளனர். இந்தப் படத்தில் சித் ஸ்ரீராம் பாடி உள்ள 'அவிழாத காலை' பாடல் வலைத்தளத்தில் வெளியாகி 10 லட்சத்துக்கும் மேற்பட்ட பார்வையாளர்களை கடந்து வைரலாகி வருகிறது. டிரெய்லரும் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. இசை: ஹரிஷ் அர்ஜுன், ஒளிப்பதிவு: யுவராஜ் மனோகரன்.