ஆபாசமாக நடுவிரலை காட்டிய சமந்தா முன்னாள் கணவரின் காதலி

நடிகை சோபிதா துலிபாலா தன் நடுவிரலை காட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வலம் வந்து கொண்டிருக்கிறது.

Update: 2022-06-30 06:30 GMT

ஐதராபாத்

தென் இந்திய சினிமாவின் நட்சத்திர ஜோடிகளாக வலம் வந்த நாக சைதன்யாவும் சமந்தாவும் நான்கு வருட திருமண வாழ்க்கைக்கு பின்னர் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இருவரும் விவாகரத்தை அறிவித்தனர். விவாகரத்திற்கு யார் காரணம் என பல வதந்திகள் பரவி வந்தன.

இதையடுத்து இருவரும் தற்போது படங்களில் கவனம் செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், நடிகை சமந்தாவை பிரிந்து ஒரு வருடம் கழித்து தற்போது நாக சைதன்யா மீண்டும் காதலில் விழுந்துள்ளதாக கூறப்படுகிறது. நாக சைதன்யா கடந்த சில வாரங்களாக நடிகை சோபிதா துலிபாலாவுடன் டேட்டிங் செய்து வருவதாக கூறப்படுகிறது.

இவர்கள் இருவரும் அண்மையில் ஜூப்ளி ஹில்ஸில் உள்ள நாக சைதன்யாவின் புதிய வீட்டில் ஒன்றாகக் காணப்படட்டதாகவும் அங்கு அவர்கள் ஒருவருக்கொருவர் மிகவும் நெருக்கமாக இருந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் 'மேஜர்' படப்பிடிப்பின் போது இருவரும் ஓட்டலில் பலமுறை சந்தித்ததாக கூறப்படுகிறது.

இந்த வதந்தியை கிளப்பிவிட்டதே சமந்தா தான் என்று கூறி நாக சைதன்யாவின் ரசிகர்கள் அவரை விளாசினார்கள். அதை பார்த்த சமந்தா, இதற்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றார்.

தற்போது சோபிதா துலிபாலா தன் நடுவிரலை காட்டும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வலம் வந்து கொண்டிருக்கிறது. தன்னை நாக சைதன்யாவுடன் சேர்த்து வைத்து பேசுபவர்களுக்காக அவர் நடுவிரலை காட்டியதாக சமூக வலைதளவாசிகள் கூறுகிறார்கள். ஆனால் அந்த வீடியோ எப்பொழுது எடுக்கப்பட்டது என்பது தெரியவில்லை.


Tags:    

மேலும் செய்திகள்