எஸ்.ஜே.சூர்யா படத்தின் புதிய பாடல் வெளியானது

இந்த பாடலை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தனது இணையப் பக்கத்தில் வெளியிட்டார்.

Update: 2023-01-28 16:52 GMT

இயக்குனர் ராதா மோகன் இயக்கத்தில் மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் உருவாகி உள்ள படம் 'பொம்மை'. எஸ்.ஜே.சூர்யா கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். ஏஞ்சல் ஸ்டுடியோஸ் வழங்கும் இப்படத்தை வி.மருது பாண்டியன், டாக்டர்.ஜாஸ்மின் சந்தோஷ், டாக்டர்.தீபா டி.துரை ஆகியோர் தயாரித்துள்ளனர்.

யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்தில் சாந்தினி, டவுட் செந்தில், ஆரோல் சங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் டிரைலர் கடந்த ஆண்டு வெளியாகி கவனம் பெற்றது

இந்நிலையில், இப்படத்தின் முதல் பாடல் தற்போது வெளியாகியுள்ளது. கார்கி வரிகளில் யுவன் ஷங்கர் ராஜா மற்றும் ஸ்வேதா மோகன் இணைந்து பாடியுள்ள இந்த பாடல் சமூக வலைதளத்தில் ட்ரெண்டாகி வருகிறது. இந்த பாடலை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தனது இணையப் பக்கத்தில் வெளியிட்டார்  .

Tags:    

மேலும் செய்திகள்