மறைந்த இயக்குனரின் மகள்களின் கல்விக்கு பண உதவி செய்த சிவகார்த்திகேயன்

ராசு மதுரவனின் மகள்களின் கல்விக்காக நடிகர் சிவகார்த்திகேயன் பண உதவி செய்துள்ளார்.

Update: 2024-07-24 09:16 GMT

சென்னை,

ராசு மதுரவன் என்பவர் தமிழ்த் திரைப்பட இயக்குனர் ஆவார். இயக்குனர் மணிவண்ணனிடம் பணிபுரிந்த இவர், பூமகள் ஊர்வலம் எனும் தமிழ்த் திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இவர் "மாயாண்டி குடும்பத்தார், கோரிப்பாளையம், முத்துக்கு முத்தாக, பாண்டி ஒலிபெருக்கி நிலையம்" போன்ற திரைப்படங்களை இயக்கியுள்ளார். இவருக்கு நெசிகா மற்றும் அனிஷ்கா என்ற இரண்டு மகள்கள் உள்ளனர்.

தொண்டை புற்றுநோயினால் பாதிக்கப்பட்ட ராசு மதுரவன் கடந்த 2013-ம் ஆண்டு ஜூலை 9-ம் நாள் தன்னுடைய 49-வது வயதில் காலமானார். ராசு மதுரவன் மறைந்து 11 ஆண்டுகள் ஆனநிலையில் அவரது மனைவி, தங்கள் குடும்பத்தின் வறுமைநிலை குறித்தும் குழந்தைகளின் கல்விக்கு பணம் இல்லாமல் தவிப்பது குறித்தும் பேசியிருந்தார். இந்த செய்தியை அறிந்த நடிகர் சிவகார்த்திகேயன், ராசு மதுரவனின் மகள்களின் கல்விக்கு பண உதவி செய்துள்ளார்.

அதாவது, இந்த வருடத்திற்கான முழு கல்வி கட்டணத்தை செலுத்தியுள்ள சிவகார்த்திகேயன், எதிர்கால கல்வி கட்டணத்தையும் தான் செலுத்தவுள்ளதாக கூறியுள்ளார். சிவகார்த்திகேயனின் இந்த செயலுக்கு ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்