சிவாஜி கணேசனின் இன்னொரு பேரனும் நடிக்க வருகிறார்
சிவாஜி கணேசனின் மற்றொரு பேரன் தர்சன் கணேசனும் சினிமாவில் நடிக்க வருகிறார்.;
நடிகர் திலகம் சிவாஜிகணேசனின் மூத்த மகன் ராம்குமார். ராம்குமாரின் 2-வது மகன் தர்ஷன் கணேசன். இவர் மிக விரைவில் ஒரு படத்தில் கதாநாயகனாக அறிமுகமாக இருக்கிறார்.
இதுபற்றி ராம்குமார் கூறியதாவது:-
ஏற்கனவே எனது மூத்த மகன் துஷ்யந்த் தயாரிப்பாளராகவும், நடிகராகவும் இருப்பது அனைவருக்குமே தெரிந்ததுதான். அவருக்கு அடுத்ததாக தர்ஷன் கணேசனும் நடிக்க வருகிறார்.புனேயில் நடிப்பு பயிற்சி எடுத்துக்கொண்டு தமிழ், ஆங்கிலம், இந்தி மொழிகளில் தெருக்கூத்து நாடகங்களை அரங்கேற்றிவிட்டு தகுந்த பயிற்சிபெற்று வருகிறார். அவருக்கு பல பட நிறுவனங்கள் அழைப்பு விடுத்துள்ளன. விரைவில் முறைப்படியான அறிவிப்பு வெளிவரும்.
இவ்வாறு ராம்குமார் கூறினார்.