'சார்' திரைப்படத்தின் டிரைலர் அப்டேட்

விமல் நடிக்கும் ‘சார்’ திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டு தேதியை படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

Update: 2024-06-18 09:52 GMT

சின்ன திரையில் அறிமுகமாகி பின் பல படங்களில் குணசித்திர நடிகராக நடித்து இருக்கிறார் போஸ் வெங்கட். பின் 2020-ம் ஆண்டு கன்னி மாடம் படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமாகினார்.

இயக்குநரும் நடிகருமான போஸ் வெங்கட் இயக்கத்தில் நடிகர் விமல் நடிக்கிறார். படத்திற்கு மா.பொ.சி (மாங்கொல்லை பொன்னரசன் சிவஞானம்) என்று படக்குழுவினர் பெயரிட்டு இருந்தனர். இப்படத்தை எஸ்எஸ்எஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க, இயக்குநர் வெற்றிமாறனின் கிராஸ்ரூட் பிலிம் கம்பெனி நிறுவனம் வெளியிடுகிறது. 

இப்படத்தின் பர்ஸ்ட்லுக் கடந்த மாதம் வெளியான நிலையில். படத்தின் தலைப்பை சில தவிர்க்க முடியாத காரணத்தினால் மாற்றியுள்ளனர். முதலில் மா.பொ.சி என தலைப்பிடப்பட்ட படம் தற்பொழுது "சார்" என மாற்றப்பட்டு இருக்கிறது.

இந்நிலையில் படத்தின் டிரைலர் வெளியீட்டு தேதியை படக்குழுவினர் அறிவித்துள்ளனர். வரும் ஜூன் 19-ம் தேதி மாலை 5 மணியளவில் டிரைலர் வெளியாகும் என அறிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்