திருப்பதி கோயிலில் காலணி அணிந்து போட்டோஷூட் : மன்னிப்பு கோரினார் விக்னேஷ் சிவன்
காலணியுடன் நாங்கள் நடமாடியதை கவனிக்க தவறிய செயலுக்காக மன்னிப்பு கோருகிறேன் என விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார்.;
திருப்பதி,
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நயந்தாராவும், அவரது கணவர் விக்னேஷ் சிவனும் நேற்று மதியம் சாமி தரிசனம் செய்தனர். அடுத்து திருப்பதியில் நடைபெற்ற கல்யாண உற்சவத்தில் இருவரும் கலந்து கொண்டனர். பின்னர் கோவிலுக்கு வெளியே ரசிகர்கள் சூழ்ந்துகொண்டதால், அங்கிருந்து சென்றுவிட்ட இருவரும் சிறிதுநேரத்தில் அதே பகுதிக்கு வந்து போட்டோ ஷூட் நடத்தினர். அப்போது இருவரும் காலணிகள் அணிந்துகொண்டனர்.
இதனால் பல்வேறு சர்ச்சைகள் எழுந்த நிலையில், தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டது. திருமலையில் போட்டோ ஷூட் செய்வதோ, நான்குமாட வீதியில் காலணிகள் அணிவதோ கூடாது என்பது ஏற்கெனவே விதிக்கப்பட்ட விதியாகும்.
இந்த நிலையில் திருப்பதியில் நடந்த தவறுக்கு மன்னிப்பு கோரி தேவஸ்தானத்திற்கு விக்னேஷ் சிவன் எழுதியுள்ள கடிதத்தில் ;
காலணியுடன் நாங்கள் நடமாடியதை கவனிக்க தவறிய செயலுக்காக மன்னிப்பு கோருகிறேன் .போட்டோஷூட் எடுத்தபோது காலணி அணிந்திருந்ததை உணரவில்லை .என விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார்.