மோகன்லாலின் 360-வது படத்தில் ஷோபனா - வீடியோ வைரல்
நடிகை ஷோபனா, மோகன்லாலின் 360-வது படத்தில் இணைந்துள்ளதாக வீடியோ வெளியிட்டு தெரிவித்துள்ளார்.;
திருவனந்தபுரம்,
பிரபல நடிகர் மோகன்லால். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'மலைக்கோட்டை வாலிபன்' எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பை பெறவில்லை. இந்நிலையில், இந்தப் படத்தைத் தொடர்ந்து பிரபல நடிகர் மோகன்லாலின் 360வது படத்தை 'சவுதி வெள்ளக்கா' பட இயக்குனர் தருண் மூர்த்தி இயக்குகிறார். 'ஆப்ரேஷன் ஜாவா', 'சவுதி வெள்ளக்கா' படங்களை இயக்கியதன் மூலம் இவர் கவனம் பெற்றார்.
இப்படத்திற்கு தற்காலிகமாக எல்360 என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தை ரஞ்சித் தயாரிக்கிறார்.மேலும், மற்ற நடிகர்கள் குறித்த தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை.
இந்நிலையில், நடிகை ஷோபனா இப்படத்தில் இணைந்துள்ளதாக வீடியோ வெளியிட்டு தெரிவித்துள்ளார். அவர் அந்த வீடியோவில்,
அனைவருக்கும் வணக்கம். இதனை தெரிவிப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். நீண்ட இடைவெளிக்கு பிறகு மலையாள படத்தில் நடிக்க உள்ளேன். அந்த படத்தை தருண் மூர்த்தி இயக்குகிறார். அந்த படத்திற்கு ஹீரோ யார் தெரியுமா?. ஆமா மோகன்லால் சார்தான். இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.