நடிகர் ஷாருக்கானுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது!

பாலிவுட் நடிகர் ஷாருக்கானுக்கு லோகார்னோ திரைப்பட விழாவில் வாழ்நாள் சாதனையாளர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.;

Update: 2024-07-04 10:53 GMT

மும்பை,

சுவிட்சர்லாந்தில் உள்ள லோகார்னோவில் ஆண்டுதோறும் 'லோகார்னோ திரைப்பட விழா' நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் 77-வது திரைப்பட விழா வரும் ஆகஸ்ட் 7-ம் தேதி தொடங்கி 17-ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த ஆண்டு திரைப்பட விழாவின் மிக உயரிய விருதான 'வாழ்நாள் சாதனையாளர் விருது' பாலிவுட் நடிகர் ஷாருக்கானுக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

2002-ல் வெளியான தேவதாஸ் அவருக்கு பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. இவரது நடிப்பில் கடந்த வருடம் வெளியான பதான், ஜவான் படங்களும் மிகப்பெரிய வெற்றி பெற்றன. இந்த இரண்டு படங்களும் ரூ.1000 கோடி வசூலித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆகஸ்ட் 11-ம் தேதி நடைபெறும் இந்த விருது வழங்கும் விழாவில் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் கடந்த 2022-ம் ஆண்டு வெளியாகி வரவேற்பை பெற்ற 'தேவதாஸ்' திரைப்படம் திரையிடப்பட உள்ளது. தொடர்ந்து ஷாருக்கான் உடனான ரசிகர்களின் கேள்வி பதில் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்