ஷாருக்கானின் 4 படங்களில் இருந்து நீக்கப்பட்ட ஐஸ்வர்யா ராய் - ஏன் தெரியுமா?

தமிழ் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் ஐஸ்வர்யா ராய்.

Update: 2024-08-02 03:54 GMT

சென்னை,

உலக அழகி பட்டத்துடன் சினிமாவில் நுழைந்த ஐஸ்வர்யா ராய் இந்தி திரையுலகில் முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார். தமிழில் இருவர், ஜீன்ஸ், கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன், ராவணன், எந்திரன், பொன்னியின் செல்வன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

இதன்மூலம் தமிழ் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் ஐஸ்வர்யா ராய். இவர் சினிமாவுக்கு வந்த ஆரம்பத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் படத்தில் நடிக்க இருந்து, பின்பு நீக்கப்பட்டிருக்கிறார். அவ்வாறு இவர் 4 படங்களில் இருந்து நீக்கப்பட்டிருக்கிறார்.

கடந்த 2003 -ம் ஆண்டு ஷாருக்கான் நடிப்பில் வெளியான படம் 'சல்தே சல்தே'. இதில், கதாநாயகியாக முதலில் ஐஸ்வர்யா ராய் நடிக்க இருந்து பின்னர் சில காரணங்களால் ராணி முகர்ஜி நடித்திருக்கிறார்.

அதே ஆண்டு வெளியான 'முன்னா பாய் எம்.பி.பி.எஸ்' படத்தில், கதாநாயகனாக ஷாருக்கானும் கதாநாயகியாக ஐஸ்வர்யா ராயும் நடிக்க இருந்திருக்கின்றனர். பின்னர் ஷாருக்கான் இதில் இருந்து விலக கதாநாயகியும் மாற்றப்பட்டார்.

ஷாருக்கான் நடிப்பில் கடந்த 2004-ம் ஆண்டு வெளியான படம் 'மெயின் ஹூன் நா'. இப்படத்தில் கதாநாயகியாக நடித்த சுஷ்மிதா சென்னுக்கு பதிலாக முன்னதாக ஐஸ்வர்யா ராய் நடிக்க இருந்திருக்கிறார்.

ஷாருக்கான், பிரீத்தி ஜிந்தா நடிப்பில் கடந்த 2004-ம் ஆண்டு வெளியான படம் 'வீர்-சாரா'. இதிலும் பிரீத்தி ஜிந்தாவுக்கு முன்னதாக ஐஸ்வர்யா ராய் கதாநாயகியாக நடிக்க இருந்திருக்கிறார்.

இவ்வாறு ஷாருக்கான் படங்களில் இருந்து நீக்கப்பட்டது குறித்து ஐஸ்வர்யா ராய், தெளிவான விளக்கங்கள் ஏதுமின்றி இந்தப் படங்களில் இருந்து நீக்கப்பட்டதாக கூறினார். இது குறித்து ஷாருக்கான், இவ்வாறு நடந்ததற்கு வருத்தமடைந்ததாகவும் கூறினார்.

இருந்தபோதிலும், ஷாருக்கான் மற்றும் ஐஸ்வர்யா ராய் சில படங்களில் இணைந்து நடித்திருக்கின்றனர். "ஜோஷ்," "மொஹப்பதீன்" போன்ற படங்கள் ஆகும்.

Tags:    

மேலும் செய்திகள்