விஜய் படத்தில் ஷாருக்கான்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்க உள்ள புதிய படத்தில் ஷாருக்கான் சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருப்பதாக தகவல் கசிந்துள்ளது.;
அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடித்து வரும் 'ஜவான்' இந்தி படத்தில் விஜய் சிறப்பு தோற்றத்தில் வருகிறார். விஜய் நடித்த காட்சிகளை சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் படமாக்கி முடித்துள்ளனர். அப்போது விஜய்யும் ஷாருக்கானும் சந்தித்து பேசிக் கொண்டனர். இந்த படத்தில் நயன்தாரா, யோகிபாபு ஆகியோரும் நடிக்கிறார்கள். இந்த நிலையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்க உள்ள புதிய படத்தில் ஷாருக்கான் சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருப்பதாக தகவல் கசிந்துள்ளது. இது விஜய்க்கு 67-வது படம். படப்பிடிப்பை விரைவில் தொடங்க உள்ளனர். இந்த படத்தில் சில காட்சிகளில் நடிக்கும்படி ஷாருக்கானிடம் படக்குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. ஷாருக்கான் நடிக்க சம்மதிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த படத்தில் சஞ்சய்தத், அர்ஜுன், கவுதம் மேனன், பிரித்விராஜ், மிஷ்கின் ஆகியோரும் நடிக்கின்றனர். விஷாலையும் வில்லனாக நடிக்க வைக்க பேசி வருகிறார்கள்.
இந்த நிலையில் ஷாருக்கானும் இணைவது படத்துக்கு பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.