'எந்த சூப்பர் ஸ்டாரும் இப்படி செய்யமாட்டார்கள்' - நடிகர் கமல்ஹாசன்

சூப்பர் ஸ்டார் பட்டத்தை மக்கள் விரும்பி தருகிறார்கள் என்று நடிகர் கமல்ஹாசன் கூறினார்.;

Update: 2024-06-28 01:32 GMT

மும்பை,

உலக நாயகன் என்று அழைக்கப்படுபவர் கமல்ஹாசன். இவர் வில்லனாக நடித்துள்ள 'கல்கி 2898 ஏடி' படம் நேற்று உலகம் முழுவதும் வெளியானது. பிரபாஸ் கதாநாயகனாக நடித்திருந்த இப்படத்தை நாக் அஸ்வின் இயக்கினார்.

தற்போது கமல்ஹாசன் இந்தியன் 2 படத்தில் மும்முரம் காட்டி வருகிறார். இப்படம் அடுத்த மாதம் 12-ம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில், நடிகர் கமல்ஹாசன் மும்பையில் நிருபர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் 'ஹேராம்' படத்தில் இந்தி சூப்பர் ஸ்டார் ஷாருக்கானுடன் நடித்தது பற்றி கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு கமல்ஹாசன் கூறுகையில், "ஹேராம் படத்தை உருவாக்கியபோது ஷாருக்கானை நான் சூப்பர் ஸ்டாராகவோ, அந்த படத்தை இயக்கிய என்னை அவர் சூப்பர் டைரக்டராகவோ நினைக்கவில்லை. 'ஹேராம்' படத்தில் நாங்கள் இருவரும் நண்பர்களாகவே இணைந்து பணியாற்றினோம். அதில் நடித்ததற்காக ஷாருக்கான் சம்பளம் வாங்கவில்லை.

எந்த சூப்பர் ஸ்டாரும் இப்படி செய்யமாட்டார்கள். கலையை நேசிப்பவர்கள் மட்டுமே இப்படி செய்வார்கள். சூப்பர் ஸ்டார் பட்டத்தை நாங்களாக வைத்துக்கொள்வது இல்லை. மக்கள் விரும்பி தருகிறார்கள். அதை ஏற்றுக்கொள்கிறோம்'' என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்