செல்வராகவனின் சர்ச்சை பதிவுகள்
செல்வராகவன் வலைத்தளத்தில் சர்ச்சை பதிவுகள் வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்தி வருகிறார்.
தமிழ் திரையுலகின் முன்னணி டைரக்டர்களில் ஒருவர் செல்வராகவன். 'காதல் கொண்டேன், 7 ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன, இரண்டாம் உலகம், என்.ஜி.கே' உள்ளிட்ட படங்களை இயக்கி உள்ளார்.
தற்போது படங்களில் நடித்து வருகிறார். நடிகை சோனியா அகர்வாலை செல்வராகவன் திருமணம் செய்து விவாகரத்து செய்து பிரிந்தார்.
பின்னர் கீதாஞ்சலி என்பவரை திருமணம் செய்து கொண்டார். சமீபகாலமாக செல்வராகவன் வலைத்தளத்தில் சர்ச்சை பதிவுகள் வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்தி வருகிறார். ஏற்கனவே, "ஒரு இடத்தில் உங்களை மதிக்கவில்லையா, அமைதியாய் புன்னகைத்துவிட்டு அங்கிருந்து வெளியேறி விடுங்கள். அவமானத்தை சகித்துக் கொண்டு உண்ணும் விருந்தைவிட, மானத்துடன் உண்ணும் பழையது அமிர்தம்" என பதிவிட்டு இருந்தார்.
தற்போது அவர் வெளியிட்டுள்ள இன்னொரு பதிவில், "தனியாகத்தான் வந்தோம். தனியாகத்தான் போவோம். நடுவில் என்ன துணை வேண்டி கிடக்கிறது? துணை என்பது கானல் நீர். நெருங்க நெருங்க தூரம் ஓடும்" என்று குறிப்பிட்டு உள்ளார்.
செல்வராகவனுக்கு என்ன பிரச்சினை. எதற்காக இதுபோன்ற பதிவுகளை அவர் வெளியிட்டு வருகிறார் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.