'கோழிப்பண்ணை செல்லதுரை' டிரெய்லர் வெளியீடு

சீனு ராமசாமி இயக்கும் ‘கோழிப்பண்ணை செல்லதுரை’ படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.

Update: 2024-09-02 13:28 GMT

சென்னை,

தென்மேற்கு பருவக்காற்று, நீர் பறவை, தர்மதுரை ஆகிய வெற்றிப் படங்களை இயக்கி கவனம் பெற்றவர் இயக்குநர் சீனு ராமசாமி. இவர் இயக்கத்தில் இறுதியாக வெளியான 'மாமனிதன்' விமர்சகர்களிடையே நல்ல பெயரைப் பெற்றது. இயக்குநர் சீனு ராமசாமி இயக்கத்தில் 'கோழிப்பண்ணை செல்லதுரை' என்கிற பெயரில் புதிய படத்தை இயக்க வருகிறார்.

புதுமுகங்கள் பலர் நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் கடந்த ஆண்டு தேனி மாவட்டம் பெரியகுளத்தில் துவங்கியது. சீனு ராமசாமி இயக்கும் இந்தப் படத்தில் யோகி பாபு, புதுமுகங்கள் ஏகன், பிரிகிடா, ஐஸ்வர்யா தத்தா, தினேஷ் முத்தையா, சத்யா உட்பட பலர் நடிக்கின்றனர். அசோக்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். என்.ஆர்.ரகுநந்தன் இசை அமைக்கிறார். வைரமுத்து, கங்கை அமரன், பா.விஜய், ஏகாதசி உட்பட பலர் பாடல்கள் எழுதுகின்றனர். கிராமத்துப் பின்னணியில் உருவாகும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஆண்டிப்பட்டியில் நடைபெற்றது.

கிராமத்துக் கலைக்களத்தில் உருவாகியுள்ள இந்த படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

ஆக்லாந்து சர்வதேச திரைப்பட விழாவில் தேர்வான முதல் தமிழ்ப்படம் என்கிற பெயரையும் பெற்றுள்ளது. இந்த நிலையில், இப்படத்தின் டிரெய்லரை படக்குழுவினர் இன்று வெளியிட்டுள்ளனர். அண்ணன் - தங்கை உறவைப் பேசும் படமாக இது உருவாகியுள்ளது.

'கோழிப்பண்ணை செல்லதுரை'திரைப்படம் வருகின்ற செப்டம்பர் 20ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

Tags:    

மேலும் செய்திகள்