நோ சொல்ல வேண்டிய இடத்தில் நோ சொல்ல வேண்டும் - நடிகை சன்னி லியோன்

இழப்புகளை பற்றி கவலைப்படாமல் உறுதியுடன் இருக்க வேண்டும் என்று நடிகை சன்னி லியோன் கூறினார்.

Update: 2024-09-10 05:48 GMT

கொச்சி,

சமீபத்தில் கேரளாவில் வெளியான நீதிபதி ஹேமா கமிஷன் அறிக்கை மலையாள திரையுலகையே உலுக்கியுள்ளது. இந்த அறிக்கை வெளியான தைரியத்தில் பல நடிகைகள் பல வருடங்களுக்கு முன்பு தங்களுக்கு ஏற்பட்ட கசப்பான பாலியல் ரீதியான தொந்தரவுகள் குறித்து வெளிப்படையாக கூறி பிரபல நடிகர்கள், இயக்குனர்கள் மீது குற்றச்சாட்டுகளை வெளிப்படுத்தி வருகின்றனர். மலையாள திரையுலகில் நடந்த பாலியல் அத்துமீறல்கள் தென்னிந்திய திரையுலகை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.

இந்தநிலையில், கொச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நடிகை சன்னி லியோன், திரையுலகில் பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தல் குறித்து பேசினார். இது தொடர்பாக அவர் பேசியதாவது:-

நோ சொல்ல வேண்டிய இடத்தில் நோ சொல்ல வேண்டும். வெளியேற வேண்டிய இடத்தில் அதற்கும் தயாராக இருக்க வேண்டும். நாம்தான் நமக்கான எல்லைகளை தீர்மானிக்க வேண்டும். இழப்புகளை பற்றி கவலைப்படாமல் உறுதியுடன் இருக்க வேண்டும் என்றார். அதனை தொடர்ந்து பேசிய நடிகர் பிரபுதேவா, சில ஆண்டுகளாக இது போன்ற சம்பவங்கள் நடந்து வருவதாகவும், அதற்கு கண்டிப்பாக நியாயம் கிடைக்கும் என்றும் கூறினார்.

Full View
Tags:    

மேலும் செய்திகள்