காதல் கதையில் நாயகனாக சதீஷ்

காதல் கதையில் சதீஷ் நாயகனாக நடிக்கிறார்.;

Update:2023-01-27 12:27 IST

ஏராளமான படங்களில் நகைச்சுவை வேடங்களிலும் கதாநாயகர்களுக்கு நண்பனாகவும் நடித்துள்ள சதீஷ் கதாநாயகனாக மாறி உள்ளார். ஏற்கனவே `நாய்சேகர்' படத்தில் நாயகனாக வந்தார். தற்போது மீண்டும் புதிய படமொன்றில் கதாநாயகனாக நடிக்கிறார். இந்தப் படத்தை அறிமுக இயக்குனர் வெங்கி டைரக்டு செய்கிறார். இவர் லோகேஷ் கனகராஜிடம் இணை இயக்குனராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. சிம்ரன் குப்தா நாயகியாக நடிக்கிறார். ஆனந்தராஜ், ஜான் விஜய், ரமேஷ் திலக், தங்கதுரை, மதுசூதனன் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். படத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. சமூக விஷயங்களை உள்ளடக்கிய காதல் கதையம்சம் உள்ள படமாக தயாராகிறது. இந்தப் படத்தை கே.விஜய் பாண்டி தயாரிக்கிறார். இசை: வி.பி.ஆர். படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்