சசிகுமார் நடிக்கும் 'அயோத்தி' படத்தின் 2-வது பாடல் வெளியீடு
‘அயோத்தி’ படத்தில் இருந்து ‘காற்றோடு பட்டம் போல’ என்ற பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.;
சென்னை,
மந்திர மூர்த்தி இயக்கத்தில் நடிகர் சசிகுமார் நடித்துள்ள திரைப்படம் 'அயோத்தி'. இந்த படத்தில் 'குக் வித் கோமாளி' புகழ், ப்ரீத்தி அஸ்ராணி, யாஷ்பால் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். டிரைடென்ட் ஆர்ட்ஸ் ஆர்.ரவீந்திரன் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு என்.ஆர்.ரகுநாதன் இசையமைத்துள்ளார்.
மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவு செய்துள்ளார். மதப்பிரச்சினைகளை பேசும் படமாக 'அயோத்தி' உருவாகியுள்ளது. அண்மையில் இந்த படத்தின் டிரைலர் மற்றும் ஒரு பாடல் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. இந்த படம் உண்மை சம்பவங்களின் அடிப்படையில் உருவாகி இருப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் 'அயோத்தி' படத்தில் இருந்து 2-வது பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. 'காற்றோடு பட்டம் போல' என்ற பாடலை பாடகர் பிரதீப் குமார் பாடியுள்ளார். இந்த பாடல் தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.