நடிகை சமந்தாவுக்கு என்ன ஆச்சு...? டிரிப்ஸ் ஏற்றிக்கொண்டே டப்பிங்...! ரசிகர்களுக்கு அதிர்ச்சி

Update: 2022-10-29 10:44 GMT

சென்னை

சமந்தா பேமிலிமேன் 2 வெப் தொடரில் நடித்த பிறகு இந்திய அளவில் முன்னணி நடிகை என்ற நட்சத்திர அந்தஸ்தை பெற்று இருக்கிறார். சமந்தாவின் யசோதா டிரெய்லரை தமிழில் சூர்யா, தெலுங்கில் விஜய்தேவரகொண்டா, கன்னடத்தில் ரஷ்கித் ஷெட்டி, மலையாளத்தில் துல்கர் சல்மான், இந்தியில் வருண் தவான் ஆகியோர் வெளியிட்டு உள்ளனர்.

நடிகை சமந்தா ரூத் பிரபு இன்று தனது ரசிகர்களுக்கு தான் மயோசிடிஸ் எனப்படும் ஆட்டோ இம்யூன் நோயால் பாதிக்கபட்டு உள்ளதாக தெரிவித்து உள்ளார்.

இன்ஸ்டாகிராமில், சமந்தா தனது மணிக்கட்டில் டிரிப்சுடன் படுக்கையில் அமர்ந்திருப்பது போன்ற ஒரு புகைப்படத்தை வெளியிட்டார்.ஒரு மைக் அவருக்கு முன்னால் உள்ளது. நடிகை முதுகை காட்டியபடி இருந்தார். தன் முகத்தை வெளிப்படுத்தாவிட்டாலும், கைகளால் இதய அசிம்பலை அடையாளபடுத்தினார்.

கையில் டிரிப்ஸ் ஏற்றிக் கொண்டே யசோதா படத்திற்கு நடிகை சமந்தா டப்பிங் பேசியுள்ளார். இதுதொடர்பான அவரது இன்ஸ்டாகிராம் பதிவு ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

அவர் தனது டுவிட்டில்

யசோதா டிரெய்லருக்கான உங்கள் கருத்து அமோகமாக இருந்தது. உங்கள் அனைவருடனும் நான் பகிர்ந்து கொள்ளும் இந்த அன்பும் தொடர்பும் தான், வாழ்க்கை என் மீது வீசும் முடிவில்லாத சவால்களைச் சமாளிக்க எனக்கு வலிமை அளிக்கிறது.

சில மாதங்களுக்கு முன்பு எனக்கு இயல்பாகவே நோய் எதிர்ப்பு சக்தி குறையும் (மயோசிடிஸ் எனப்படும் ஆட்டோ இம்யூன்) நோய் இருப்பது கண்டறியப்பட்டது.அது நிவாரணம் அடைந்த பிறகு இதைப் பகிரலாம் என்று எதிர்பார்த்தேன்.ஆனால் நான் எதிர்பார்த்ததை விட சற்று அதிக நாள் எடுத்துக்கொள்கிறது.

நான் இன்னும் போராடிக்கொண்டிருக்கிறேன். நான் விரைவில் பூரண குணமடைவேன் என்று மருத்துவர்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர்.

எனக்கு நல்ல நாட்களும் கெட்ட நாட்களும் இருந்தன. உடல் ரீதியாகவும் உணர்ச்சி ரீதியாகவும்…. என்னால் எப்படியோ அந்த தருணம் கடந்து செல்கிறது.

நான் குணமடையும் நாளை நெருங்கிவிட்டேன் என்று நினைக்கிறேன். நான் உங்களை நேசிக்கிறேன்... இதுவும் கடந்து போகும்." என கூறி உள்ளார்.

ரசிகர்கள் சமந்தாவுக்கு ஆறுதல் தெரிவித்தும், பூரண குணம் அடைய வாழ்த்து தெரிவித்தும் வருகின்றனர்.





Tags:    

மேலும் செய்திகள்