'ஆவேஷம்': 'நீங்கள் ஒரு மேதை' - சமந்தாவின் பதிவு வைரல்

நடிகை சமந்தா 'ஆவேஷம்' படத்தின் இசையமைப்பாளர் சுஷின் ஷியாமை மேதை என்று பாராட்டியுள்ளார்.

Update: 2024-04-22 04:45 GMT

சென்னை,

மலையாள திரையுலகில் பிரபல நடிகராக இருக்கும் பகத் பாசில் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகி வசூல் சாதனை நிகழ்த்திய புஷ்பா படத்தில் வில்லனாக நடித்து இந்திய அளவில் கவனம் பெற்றார்.

தற்போது ஜித்து மாதவன் இயக்கத்தில் பகத் பாசில் நடிப்பில் வெளியான மலையாளப் படம் 'ஆவேஷம்' . இந்த படத்தில் மன்சூர் அலிகான், ஆசிஸ் வித்யார்தி, சஜின் கோபு, பூஜா மோகன்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்தனர்.

கடந்த 11-ம் தேதி வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. படம் வெளியாகி 10 நாட்களை கடந்துள்ள நிலையில், உலகம் முழுவதும் ரூ.80 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரூ.20 கோடி பட்ஜெட்டில் இப்படம் உருவானதாக கூறப்படுகிறது.

இந்த ஆண்டு தொடக்கம் முதலே மலையாள சினிமா பாக்ஸ் ஆபீஸில் கலக்கி வருகிறது. 'பிரம்மயுகம்', 'பிரேமலு', 'மஞ்சுமெல் பாய்ஸ்' படங்களின் வரிசையில் தற்போது 'ஆவேஷம்' படமும் நுழைந்துள்ளது.

இந்நிலையில், இப்படத்திற்கு நடிகை சமந்தா வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் இப்படத்தின் இசையமைப்பாளர் சுஷின் ஷியாமை மேதை என்றும் பாராட்டியுள்ளார். இது குறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்