ராம் சரணை இயக்கும் முன்னணி தமிழ் நடிகர்?

தனுஷ் இயக்கத்தில் ராம் சரண் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது;

Update:2025-03-30 08:16 IST

சென்னை,

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் ராம் சரண், தற்போது புச்சி பாபு இயக்கும் 'பெடி' படத்தில் நடித்து வருகிறார். இதில் அவருக்கு ஜோடியாக ஜான்வி கபூர் நடிக்கிறார். சமீபத்தில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி வைரலானது.

இதற்கிடையில், தேசிய விருது பெற்ற முன்னணி தமிழ் நடிகர் தனுஷ், சமீபத்தில் ராம் சரணை சந்தித்து ஒரு கதையை கூறியதாகவும், அதற்கு ராம் சரண் ஓகே சொன்னதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

தனுஷ் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான 'நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படம்' பாக்ஸ் ஆபிஸில் ஏமாற்றத்தை கொடுத்தது. தனுஷ் தற்போது 'இட்லி கடை' , பாலிவுட்டில் 'தேரே இஷ்க் மெய்ன்' ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்