பிரபலங்கள் பட்டியலில் முதல் இடம் பிடித்த சமந்தா..!
தனியார் நிறுவனம் நடத்திய ஜூன் மாத கருத்து கணிப்பில் 2023-ம் ஆண்டின் பிரபலமான பெண் நட்சத்திரங்களில் சமந்தா முதல் இடம் பிடித்துள்ளார்;
தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக ஜொலித்து வரும் சமந்தா, 'புஷ்பா' படத்தில் 'ஓ சொல்றியா மாமா...' பாடலுக்கு ஆடிய வளைவு நெளிவான நடனம் பான் இந்தியா ஸ்டாராக உயர்த்திவிட்டது.
இப்போது சமந்தாவுக்கு இன்னும் ஒரு கவுரவம் கிடைத்திருக்கிறது. அதாவது, புகழ்பெற்ற தனியார் நிறுவனம் நடத்திய ஜூன் மாத கருத்து கணிப்பில் 2023-ம் ஆண்டின் பிரபலமான பெண் நட்சத்திரங்களில் சமந்தா முதல் இடம் பிடித்துள்ளார். அந்தவகையில் சமந்தா 8-வது முறையாக இந்த கவுரவத்தை பெற்றுள்ளார். இதனால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியில் திளைக்கிறார்கள்.
சமந்தாவுக்கு அடுத்தபடியாக ஆலியாபட், நயன்தாரா, தீபிகா படுகோனே, காஜல் அகர்வால், கீர்த்தி சுரேஷ், ராஷ்மிகா, பூஜா ஹெக்டே, அனுஷ்கா ஆகியோர் முறையே அடுத்தடுத்த இடங்களில் தொடருகிறார்கள். அந்தவகையில் இந்தி நடிகைகளை சமந்தா பின்னுக்கு தள்ளியிருக்கிறார்.
விஜய் தேவரகொண்டாவுடன் சமந்தா நடித்துள்ள 'குஷி' படமும், 'சிட்டாடல்' என்ற வெப் தொடரும் அடுத்தடுத்தடுத்து வெளியாக இருக்கிறது. மயோசிடிஸ் என்ற தசை அழற்சி நோய் பாதிப்பு காரணமாக தொடர் சிகிச்சை மேற்கொள்ள சமந்தா முடிவு எடுத்திருக்கிறார். இதற்காக புதிய படங்களில் நடிக்க அவர் ஒப்பந்தமாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது