'விஜய், அஜித் படங்களில் நடிக்க மறுத்தது ஏன்? - சாய்பல்லவி விளக்கம்

விஜய், அஜித் படங்களில் நடிக்க மறுப்பு தெரிவித்தது ஏன்? என்ற கேள்விக்கு சாய்பல்லவி பதிலளித்தார்;

Update: 2024-05-31 14:38 GMT

சென்னை,

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக இருப்பவர் சாய்பல்லவி. அவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இவர் நல்ல கதைகளை கொண்ட படங்களாக தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இதனால், சில படங்களில் நடிக்கும் வாய்ப்புகளை மறுத்தும் உள்ளார்.

முன்னதாக, விஜய் படத்தில் நடிக்கும் வாய்ப்பை சாய்பல்லவி நிராகரிப்பதாக கூறப்பட்டது, மேலும் அஜித் படம் ஒன்றில் நடிக்கும் வாய்ப்பையும் மறுத்ததாக தகவல் வெளியானது. இந்நிலையில், விஜய், அஜித் படங்களில் நடிக்க மறுப்பு தெரிவித்தது ஏன்? என்ற கேள்விக்கு சாய்பல்லவி பதிலளித்தார்

இது குறித்து அவர் அளித்த பேட்டியில், வதந்திகளுக்கு நான் ஒருபோதும் பதிலளிப்பதில்லை. வதந்திகளுக்கு விளக்கமளித்தால் அதற்கு மேலும் பலம் சேர்ந்துவிடும். அது என் வேலையயும் பாதிக்கிறது. இதனால்தான் நான் அமைதியாக இருக்கிறேன். இருப்பினும், விஜய், அஜித் படங்களில் நடிக்கும் எந்த வாய்ப்புகளையும் நான் நிராகரித்தல்லை. இவ்வாறு கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்