'ஜனநாயகன்' படத்தின் முதல் பாடல் ரிலீஸாகும் தேதி இதுவா? - இணையத்தில் பரவும் தகவல்

'ஜன நாயகன்' படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையில் வெளியாக உள்ளது.;

Update:2025-03-31 08:19 IST
Is this the release date for the first song of the film Jana nayagan?

சென்னை,

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய்யின் 69-வது படத்தை பிரபல இயக்குனர் எச்.வினோத் இயக்குகிறார். இந்த படத்திற்கு 'ஜன நாயகன்' என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தில் பிரகாஷ் ராஜ், பிரியாமணி, கவுதம் வாசுதேவ் மேனன், பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, நரேன் ஆகியோர் நடிக்கின்றனர்.

கே.வி.என் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 9-ந் தேதி வெளியாக உள்ளது. இதனையடுத்து, படத்தின் அடுத்த அப்டேட்டை எதிர்பார்த்து ரசிகர்கள் உள்ளனர்.

இந்நிலையில், ஜனநாயகன் படத்தின் முதல் பாடல் ரீஸாகும் தேதி குறித்து இணையத்தில் தகவல் ஒன்று பரவி வருகிறது. அதன்படி, நடிகர் விஜய் வரும் ஜூன் 22-ம் தேதி தனது 51-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அன்றைய தினம் 'ஜனநாயகன்' படத்தின் முதல் பாடலை வெளியிடுவதற்கு படக்குழுவினர் தயாராகி வருவதாகக் கூறப்படுகிறது. இது விஜய்யின் கடைசி படம் என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்