கற்பழிப்பு காட்சியை விவரிப்பதாக கூறி அத்துமீறல்: நடிகை பகிர்ந்த கசப்பான அனுபவம்

தெலுங்கில் 80, 90-களில் முன்னணி கவர்ச்சி நடிகையாக ஜொலித்தவர், ஜெ.லலிதா.

Update: 2023-09-17 09:16 GMT

மலையாளம், இந்தி என 650-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளவர் ஜெ.லலிதா. தற்போது படங்களிலும், டி.வி. தொடர்களிலும் குணச்சித்திர நடிகையாக நடித்து வருகிறார்.

சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ஜெ.லலிதா, தனது சினிமா பயணத்தில் நடந்த கசப்பான அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். அவர் கூறியதாவது:-

நடிக்க வந்த புதிதில் எனக்கு கவர்ச்சி கதாபாத்திரங்களே கிடைத்தன. ஆனாலும் குடும்ப கஷ்டம் காரணமாக அதனை ஏற்று நடித்தேன். எல்லா துறைகளை போல சினிமாவிலும் பெண்களுக்கு பாலியல் தொல்லைகள் இருக்கத்தான் செய்கிறது.

நான் முதல்முறையாக ஒரு மலையாள படத்தில் நடிக்க சென்றபோது, அதன் உதவி இயக்குனர் ஒருவர் என்னிடம் பேச்சு கொடுத்தார். படத்தில் உள்ள ஒரு கற்பழிப்பு காட்சியை பற்றி விவரித்து கூறவேண்டும் என்று கூறி ஒரு அறைக்கு என்னை அழைத்து சென்றார். அங்கு என்னிடம் அவர் அத்துமீறி நடந்து கொண்டார். என்னிடம் அத்துமீறிய அந்த உதவி இயக்குனர் அடுத்த 6 மாதங்களிலேயே இறந்து போனார்.

என் மனதை புண்படுத்தினால் இப்படித்தான் நடக்கும் என நினைத்துக் கொண்டேன். எனக்கு ஏற்பட்ட சம்பவமே சினிமாவிலும் பாலியல் தொல்லை இருக்கிறது என்பதற்கு சாட்சி. இதை இப்போது தெரிவிப்பதில் எந்த தயக்கமும் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்