மெகா பட்ஜெட்டில் உருவாகும் 'ராமாயணம்' : ரிலீஸ் குறித்து வெளியான தகவல்
ராமாயணம் படம் மூன்று பாகங்களாக தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் உருவாகிறது.;
மும்பை,
நிதிஷ் திவாரி இயக்கத்தில் ராமாயணம் கதையை மையமாக வைத்து தயாராகும் புதிய படத்தில் ராமராக ரன்பீர் கபூர், சீதையாக சாய் பல்லவி நடிக்கின்றனர். கன்னட நடிகர் யஷ் ராவணனாக வருகிறார். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.
இந்த படத்தில் அனுமானாக சன்னி தியோல், கும்பகர்ணனாக பாபிதியோல் நடிக்கின்றனர். ராமாயணம் படம் மூன்று பாகங்களாக தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் உருவாகிறது. சமீபத்தில் இப்படத்தின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகின.
இந்நிலையில், இப்படம் குறித்த மேலும் சில தகவல்கள் வெளியாகி உள்ளன. அதன்படி, இப்படம் சுமார் ரூ.835 கோடி என்ற மெகா பட்ஜெட்டில் உருவாவதாகவும், 2027-ம் ஆண்டு அக்டோபர் மாதம் வெளியாகும் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.