ராமாயணம்: லட்சுமணனாக நடிப்பது யார்? - வெளியான அப்டேட்

லட்சுமணனாக நடிக்க தேர்ந்தெடுக்கப்பட்டவர் குறித்த அப்டேட்டை நடிகர் முகேஷ் சாப்ரா வெளியிட்டுள்ளார்.;

Update: 2024-08-23 08:27 GMT

சென்னை,

ரன்பீர் கபூரின் ராமாயணத்தில் லட்சுமணனாக நடிக்க தேர்ந்தெடுக்கப்பட்டவர் அந்த பாத்திரத்திற்கு மிகவும் பொருத்தமானவர் என்று நடிகர் முகேஷ் சாப்ரா தெரிவித்திருக்கிறார்.

நிதிஷ் திவாரி இயக்கத்தில் ராமாயணம் கதையை மையமாக வைத்து தயாராகும் புதிய படத்தில் ராமராக ரன்பீர் கபூர், சீதையாக சாய் பல்லவி ஆகியோர் நடிக்கின்றனர். கன்னட நடிகர் யாஷ் ராவணனாக வருகிறார். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.

இந்த படத்தில் அனுமானாக சன்னி தியோல், கும்பகர்ணனாக பாபிதியோல் ஆகியோர் நடிக்கின்றனர். ராமாயணம் படம் மூன்று பாகங்களாக உருவாக இருக்கிறது. ரூ.1,000 கோடி பட்ஜெட்டில் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் எடுக்கின்றனர்.

படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில், இப்படத்தில் லட்சுமணனாக நடிக்க தேர்ந்தெடுக்கப்பட்டவர் யார் என்பது குறித்த அப்டேட்டை நடிகர் முகேஷ் சாப்ரா வெளியிட்டுள்ளார். இது குறித்து அவர்,

'இந்த பாத்திரத்திற்கான ஆடிஷனில் நிறைய பேர் கலந்துகொண்டனர். நாங்கள் தேர்ந்தெடுத்த நடிகரை எண்ணி மகிழ்ச்சியடைகிறேன். லட்சுமணனாக நடிக்க ஒரு அழகான அந்த பாத்திரத்திற்கு மிகவும் பொருத்தமான நடிகர் ஒருவரை கண்டுபிடித்துள்ளோம். இது பாலிவுட்டில் அவரது முதல் படமாக இருக்கும்', என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்