ராமாயண படம் சர்ச்சை... நடிகர் பிரபாசுக்கு கோர்ட்டு நோட்டீஸ்

ராமாயண படம் சர்ச்சையில் நடிகர் பிரபாசுக்கு கோர்ட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

Update: 2022-10-13 02:28 GMT

ராமாயண கதையை மையமாக வைத்து ஆதிபுருஷ் படம் தயாராகி உள்ளது. இதில் ராமராக பிரபாஸ், ராவணனாக சயீப் அலிகான், சீதையாக கீர்த்தி சனோன் நடித்துள்ளனர். ஓம் ராவத் இயக்கி உள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டு உள்ளனர். இந்த படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி சர்ச்சையை கிளப்பியது. டிரெய்லரில் இடம் பெற்றுள்ள காட்சிகள் வீடியோ கேம் போல் இருப்பதாகவும் ராவணனை தவறாக சித்தரித்து இருப்பதாகவும் கண்டித்தனர். அயோத்தி ராமர் கோவிலின் தலைமை குரு ஆதிபுருஷ் படத்தை வெளியிட அனுமதிக்கக்கூடாது என்று வலியுறுத்தினார். பா.ஜனதா பிரமுகர் மாளிகா அவினாஷ், ''இலங்கையை சேர்ந்த ராவணன் சிவ பக்தர். 64 கலைகள் கற்றவர். அவருக்கு ஜாக்கெட் அணிந்து நீல நிற கண்களுடன் சர்வாதிகாரி போல் தவறாக காட்டி உள்ளனர். ராமாயண சரித்திரத்தை தவறாக சித்தரித்து உள்ளனர்" என்று சாடினார். இந்த நிலையில் ஆதிபுருஷ் படத்தில் ராமரையும், ராவணனையும், அனுமனையும் தவறாக சித்தரித்து இருப்பதாக டெல்லி கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. இந்த வழக்கில் பிரபாஸ் உள்ளிட்ட படக்குழுவினருக்கு கோர்ட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்