'ஜெயிலர் 2' படத்தின் அப்டேட்...டைட்டில் இதுவா?- வெளியான தகவல்

’ஜெயிலர் 2’ படத்தின் அப்டேட் வெளியாகி உள்ளது.;

Update:2024-04-13 07:18 IST

சென்னை,

நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த 'ஜெயிலர்' படம் மிகப்பெரிய வெற்றிபெற்றது. இதில் மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராப், தமன்னா, ரம்யா கிருஷ்ணன் உள்பட பலர் நடித்தனர். இந்த படத்தின் வசூல் ரூ.600 கோடியையும் தாண்டி சாதனை படைத்தது.

முன்னதாக 'ஜெயிலர்' படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கவும் திட்டமிட்டு இருப்பதாக நெல்சன் தெரிவித்து இருந்தார். அதன்படி, தற்போது ஜெயிலர் 2 படத்தின் அப்டேட் வெளியாகி உள்ளது. அதில் ஜெயிலர் 2 படத்திற்கு 'ஹுக்கும்' என்று டைட்டில் வைத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

ரஜினிகாந்த் தற்போது ஞானவேல் இயக்கும் 'வேட்டையன்' படத்தில் நடித்து வருகிறார். தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தை முடித்த பிறகு ஜெயிலர் 2-ம் பாகத்தில் நடிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி இந்த வருட இறுதியில் அல்லது அடுத்த வருட தொடக்கத்தில் ஜெயிலர் 2 படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக ஜெயிலர் படத்திற்கு பிறகு நெல்சன் கூறும்போது, "ஜெயிலர் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கும் யோசனை உள்ளது. அதுபோல் நான் இயக்கிய கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் படங்களின் இரண்டாம் பாகங்களை இயக்கவும் திட்டம் உள்ளது'' என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்