'ராயன்' படத்தின் முதல் பாடல் - அப்டேட் கொடுத்த தனுஷ்

'ராயன்' படத்தின் முதல் பாடல் விரைவில் வெளியாகும் என்று நடிகர் தனுஷ் பதிவிட்டுள்ளார்.

Update: 2024-04-14 13:49 GMT

சென்னை,

சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் தனுஷ் நடித்து இயக்கும் 'ராயன்' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது. தற்போது தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

தனுஷ் நடித்து இயக்கும் அவரது 50வது படமான 'ராயன்' படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில் இந்த படம் தேர்தலுக்குப் பின்னர் ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி, வரலட்சுமி சரத்குமார் ஆகிய மூன்று நாயகிகள் நடிக்கும் இந்த படத்திற்கு ஏஆர் ரகுமான் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில், தமிழ் புத்தாண்டை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்துள்ள நடிகர் தனுஷ் 'ராயன்' படத்தின் முதல் பாடல் விரைவில் வெளியாகும் என்றும் அப்டேட் கொடுத்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் புகைப்படம் வெளியிட்டு தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்