புஷ்பா- 2 படப்பிடிப்பு திடீர் நிறுத்தம்...? இது வரை எடுத்த காட்சிகளை அழிக்க டைரக்டர் முடிவு...!

தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகமான 'புஷ்பா-தி ரூல்' படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆகஸ்ட் மாதம் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது.;

Update:2023-04-04 17:47 IST

ஐதராபாத்

இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, ஃபகத் பாசில், ஜகதீஷ், சுனில், ராவ் ரமேஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய ஹிட் அடித்த படம் 'புஷ்பா'. இப்படம் தெலுங்கு மொழியில் உருவாக்கப்பட்டு தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட இந்திய மொழிகளில் வெளியாகி ரூ.350 கோடி வரை வசூலை ஈட்டியது.

தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகமான 'புஷ்பா-தி ரூல்' படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆகஸ்ட் மாதம் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது.

ஆனால் தற்போது வந்துள்ள தகவல்கள் படத்திற்காக காத்திருக்கும் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தற்போது நடைபெற்று வரும் புஷ்பா 2 படத்தின் படப்பிடிப்பில் டைரக்டர் சுகுமார் திருப்தி அடையவில்லை என்று கூறப்படுகிறது.இதனால் படப்பிடிப்பு திடீர் என நிறுத்தபட்டது. மீண்டும் படப்பிடிப்பு தொடங்குமா? எப்போது தொடங்கும் என தெரியவில்லை. தற்போது வரை எடுக்கபட்ட காட்சிகளை எல்லாம் அழிக்க இயக்குனர் யோசிப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. புஷ்பா 2 படத்தின் டீசரை அல்லு அர்ஜுன் பிறந்த நாளான ஏப்ரல் 8ஆம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின.

இதற்கிடையில், படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதா அல்லது புஷ்பா 2 ஒத்திவைக்கப்பட்டதா என்பது குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இல்லை.

கடந்த மாதம், புஷ்பா இயக்குனர் சுகுமார், புஷ்பா 2 படத்திற்காக ஒரு முக்கிய பாலிவுட் நட்சத்திரத்தை, அஜய் தேவ்கன் அல்லது வேறு யாரையாவது தேர்வு செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

புஷ்பா: தி ரூல் படப்பிடிப்பு மூன்று மாதங்களுக்குப் பிறகு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது. இதனால் இதன் வெளியீடு அடுத்த வருடத்திற்கு தள்ளிப்பொகும் என கூறப்படுகிறது.

இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் இல்லை, தயாரிப்பாளர் இதுகுறித்த பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை விரைவில் வெளியிடுவார் என கூறப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்